கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் லிங்காயத் சமூகத்தை சார்ந்தவர்கள் தான். இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுபவர்கள். வீரசைவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். 12-ம் நூற்றாண்டில் சாதிய பாகுபாடுகளை களைய பாடுபட்ட சமூக சீர்த்திருத்தவாதியான பசவேஷ்வரா இந்த சமூகத்தின் மிக முக்கிய முன்னோடியாக இம்மக்களால் கருதப்படுகிறார்.
இந்து மதத்தில் உள்ள வர்ண சாஸ்திரங்களை இவர்கள் எதிர்ப்பவர்கள், தொடக்கம் முதலே தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டுள்ளவர்கள். இந்த சமூகத்தினர் தங்களை தனிமதமாக அங்கீகரிக்க வேண்டும் என நீன்ட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்து மதத்தில் இருந்து லிங்காயத்துகள் பிரிந்தால் இந்து மதம் கர்நாடகாவில் பலவீனமாகும் என்று கருதியது ஆர்.எஸ்.எஸ். அந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவரான மோகன் பகவத், லிங்காயத் சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து பல முறை சந்தித்து பேசினார். ஆனால் லிங்காயத் சமூகத்தினர், நாங்கள் வீர சைவர்கள் எங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை அப்படி இருக்கும் போது எங்களை ஏன் இந்து மதத்தில் தான் இருக்க வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்துகிறீர்கள். உங்கள் ஆலோசனையை நாங்கள் கேட்க மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்திற்கு பதில் சொல்லிவிட்டு வந்து விட்டனர். அதோடு இனி மோகன் பகவத் இவ்விஷயத்தில் தலையிட கூடாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்தான் இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை லிங்காயத் சமூக பிரதிநிதிகள் சந்தித்து தங்களை தனி மதமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். லிங்காயத் சமூகம் தங்களை தனி மதமாகவும் நாங்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று வெளிப்படையான போராட்ட நிலைக்கு வந்திருப்பது இந்து மத காப்பாளர்களான ஆர்.எஸ்.எஸ். தீவிர நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதற்கு காரணம் அடுத்து தமிழகம் உட்பட மொழி வாரியாக உள்ள மக்கள் தங்கள் வழிபாட்டு முறைப்படி தனித் தனி மதமாக அறிவிக்க கோரினால் இந்து மதம் என்பது இல்லாமல் போய்விடும் அபாயம் இருப்பதால்தான் ..!