கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது.
இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் தற்போது பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து முன்னிலை நிலை மாறி மாறி காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே சித்தராமையா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார். எனினும் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.