பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி, ‘நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் அழித்து வருகிறார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றுகூடுங்கள் என்று நான் வேண்டுகிறேன். அவர்கள்தான் பிரதமரின் அநியாயங்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியும்’ என்று கூறினார்.
மேலும், ‘நரேந்திர மோடி ஒரு பக்கம் நாட்டுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உபதேசம் கூறுகிறார். மற்றொரு பக்கம் அவரது நண்பர்களை வைத்து கருப்பு பணத்தால் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து வருகிறார். நான் தற்போதே இதை நிரூபிப்பேன். என்னிடம் ஆதாரங்கள் உள்ளது’ என்று கூறினார்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நாகனா கௌடாவின் மகன் ஷாரனாவிடம் மொபைலில் பேசிய ஆடியோவை குமாரசாமி வெளியிட்டார். அந்த பேச்சுவார்த்தையில் எடியூரப்பா அவரிடம் 25 லட்சம் பணமும், அவரது தந்தைக்கு மினிஸ்டர் பதவி தருவதாகவும் கூறுகிறார்.