நவராத்திாி விழாவையொட்டி 10 ஆவது நாளான விஜயதசமி அன்று கோவில்களில் நடத்தப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி என்பது ஒரு முக்கிய பிரதானம் ஆகும். இந்த நாளில் பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கி வைக்கும் விதமாக வித்யாரம்பம் நடத்தப்படுவது வழக்கம். அந்த நாளில் குழந்தைகளுக்கு நாவில் தங்க ஊசியால் எழுத்துகளை எழுதுவதும் தட்டில் அாிசி அல்லது நெல் மணிகளை வைத்து குழந்தைகளின் விரலால் கொண்டு 'ஹாி ஸ்ரீ கணபதயே நம' என முதலில் எழுதி கொண்டு அடுத்து தாய்மொழி எழுத்துகளில் அ, ஆ எழுதுவாா்கள்.
இப்படி விஜயதசமி அன்று கல்வி ஊட்டப்படும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவாா்கள் என்பது காலம் காலமாக கடந்து நிற்கும் ஐதீகம். இந்நிலையில் இன்று 26-ம் தேதி முக்கிய இந்து கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தபட்டது. இதில் கல்வியில் நல்ல நிலையில் இருக்கும் பொியவா்கள், சமுதாயத்தில் நல்ல மதிப்போடு உள்ளவா்கள், கோவில் பூசாாிகளின் மடியில் குழந்தைகளை உட்கார வைத்து பெற்றோா்களின் முன்னிலையில் வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலும் பல கோவில்களில் நடத்தப்பட்டது
இதே போல் கேரளாவிலும் பல கோவில்களில் வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன், காிக்கம் சமூண்டீஸ்வாி கோவில் பத்மநாபசுவாமி கோவில் நவராத்திாி மண்டபம், பூஜைபுர சரஸ்வதி அம்மன் கோவில், மேலும் சக்குளத்து காவு பகவதி அம்மன் கோவில்களில் வித்யாரம்பம் நடந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.
மேலும் கேரளா முதல்வா் பிணராய் விஜயன் தன்னுடைய இல்லத்தின் அவருடைய காா் ஓட்டுனா் வசந்தகுமாாின் பேரப்பிள்ளைகளுக்கும் உறவினா்கள் குழந்தைகளுக்கும் வித்யாரம்பத்தை தொடங்கி வைத்தாா்.