ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2007 மே 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல்துறை தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த மூன்று குண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்தது. வெடிக்காமல் இருந்த மற்ற இரண்டையும் போலீசார் கைப்பற்றினர். இதில் இந்து அமைப்பைச் சேர்ந்த லோகேஷ் சர்மா, அசீமானந்த், தேவேந்திர குப்தா, ரஜேந்தர் செயத்ரி பாரத்பாய் உள்ளிட்ட எட்டு பேர் மீதி என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.
தற்போது இவர்களில் ஐந்து பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 11 வருடங்களாக 200 சாட்சியங்களை விசாரித்த நீதிமன்றம் ஐவர் மீதும் உள்ள குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி விடுதலை அளித்துள்ளது.