கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. இதனால் பல அணைகள் நிறம்பிய நிலையில், திறக்கப்பட்டன. பலத்த மழையினால் வெள்ளமும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பலர் வீட்டை விட்டு வெளியேறி, மிட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7.14 லட்சம் பேர் மிட்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டின் கரந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ்(19). கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முகாமில் தன்னுடைய பெற்றோறுடன் தஞ்சம் புகுந்துள்ளார். இவருக்கு தொழிற்பயிற்சி மையத்தில் சேர அனுமதியும் கிடைத்துள்ளது. வீட்டில் நீர் வடிந்த பிறகு கைலாஷ் வீட்டை வந்து பார்த்துள்ளார். அப்போது அவருடைய 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் நீரில் முழ்கியிருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டை சுத்தம் செய்வதற்காக கைலாஷின் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது கைலாஷ் துக்குபோட்டநிலையில் மரணமடைந்துள்ளார்.