
சென்னையில் காற்றோட்டத்திற்காக இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து விட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் அடுத்துள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் நாராயணன் ராஜ் என்பவர் இரவு நேரத்தில் காற்றோட்டத்திற்கு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.
சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சியில் வேறொரு வீட்டில் திருடுவதற்கு புகுந்த அந்த நபர் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் திறந்து வைக்கப்பட்டிருந்த நாராயணன் ராஜ் வீட்டில் புகுந்து திருடி விட்டு காம்பவுண்ட் சுவரின் மீது எகிறிகுதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.