இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
பஞ்சாயத்து மற்றும் நகர வார்டுகள் அளவில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அண்மைக்காலமாகக் கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தநிலையில் கேரளாவில் நேற்று தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. நேற்று அம்மாநிலத்தில் 8,850 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியானது.
இந்தநிலையில் இன்று கேரளாவில் நேற்றைவிட தினசரி கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று அம்மாநிலத்தில் 9,735 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 151 பேர் உயிரிழந்துள்ளனர்.