இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை (27.04.2021) இரவு முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியிலும் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், கரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்திற்கு கோடை கால விடுமுறை முன்கூட்டியே விடப்பட்டுள்ளது.