Skip to main content

4ஜி சேவையில் 96.7% பிடித்த ஜியோ...!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

லண்டனைச் சேர்ந்த ஓப்பன்சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு நாடு முழுக்க மொத்தம் 50 நகரங்களில் நடத்தப்பட்டது. அதேசமயம் இந்த ஆய்வு 4ஜி வசதி கிடைக்கும் எல்லையை வைத்து கணக்கிடாமல், பயனாளர்களின் பயன்பாட்டு நேரத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

4g service in India

 

இந்த ஆய்வின் முடிவுப்படி இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரத்தில்தான்  4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நகரில் 95.3% 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரத்திற்கு அடுத்தப்படியாக 95% பெற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்ரீநகர் 94.9% கொண்டு மூன்றாவது இடத்திலும் 0.1 சதவீதத்தை இழந்து ராய்பூர் 94.8% கொண்டு நான்காவது இடத்தில் உள்ளது. 
 

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகியவை முதல் 10 இடங்களில்கூட இடம்பிடிக்கவில்லை. இதில் பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் 92% 4ஜி வசதியை பெற்றுள்ளது.
 

மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்கள் எல்லாம் 87 சதவீதத்திற்கும் அதிகமான 4ஜி அளவை பெற்றுள்ளதாகவும், இந்தியாவை பொறுத்தவரை 4ஜி வசதி கொடுப்பதில் ஜியோ 96.7% பெற்று முதலிடத்தில் இருப்பதாக அந்நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மற்ற போட்டியாளர்களை விடவும் 20 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்