Skip to main content

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா! 26 பேர் உயிரிழப்பு!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

கேரளாவில் கடந்த புதன்கிழமை முதல் பெய்துவரும் கன மழையினால் கேரளாவில் வயநாடு, கண்ணூர், ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள்  வெள்ளத்தில் மிதக்கின்றன.

 

KERALA

 

 

 

KERALA

 

 

KERALA

 

 

 

வெள்ளநீர் வெளியே செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தன்னூரில் மழை வெள்ளத்தால் வீடுக்கள் அடித்து செல்லப்பட்டன. காற்றாற்று வெள்ளத்தில்மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படுகிறது.

 

கொச்சி விமானநிலையத்தில் விமான ஓடுபாதையில் நீர் புகுந்ததால் மோட்டார் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்புக்குழுவினர் படகுமூலம் மீட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளதால் கரையோர  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலமாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் தொடர் கனமழையினால் இதுவரை 26 பேர் உயிரிலிந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்