Published on 05/01/2021 | Edited on 05/01/2021
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு பண்ணையில் 1650 வாத்துகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
மேலும் கேரளாவின் பிற பகுதிகளிலும் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளுக்கு இந்தப் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் 48 ஆயிரம் பறவைகளைக் கொல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதியில் வேகமாக பரவி வருவதால், பறவைக் காய்ச்சலை கேரள அரசு மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.