கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்ட கொலிகல் என்ற பகுதியில் வசித்து வரும் ராஜாமணி என்ற பெண் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும் செய்து வரும் ராஜாமணி, வேறு ஒருவரிடம் கடன் வாங்கி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடனாக கொடுத்துள்ளார். அவரிடம் கடன் வாங்கியவர்கள் திரும்ப கடனை தராததால், ராஜமணியால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை உடனடியாகத் திரும்பக் கேட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#WATCH A woman was tied to a pole in Kodigehalli, Bengaluru, yesterday, allegedly for not repaying a loan she took. Police have arrested 7 people in connection with the incident. #Karnataka pic.twitter.com/jpwX3Cr0Gu
— ANI (@ANI) June 14, 2019