Skip to main content

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Tax exemption on cooking oil imports!

 

உள்நாட்டில் சமையல் எண்ணெய்யைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதற்கான இறக்குமதி வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

இந்தோனேசியாவில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை அண்மையில் நீக்கப்பட்டதையடுத்து, இந்தியாவில் அதனை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, உள்நாட்டில் சமையல் எண்ணெய்யைக் கட்டுப்படுத்தும் வகையில், அதனை இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை தலா 20 லட்சம் டன் வரை வரியில்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்