Skip to main content

யார் இந்த பசவராஜ் பொம்மை?

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

karnataka state new chief minister Basavaraj Bommai

 

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை இன்று (28/07/2021) காலை 11.00 மணிக்குப் பதவியேற்கிறார். ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், பசவராஜ் பொம்மைக்கு கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராகத் தேர்வானதைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை இன்று (28/07/2021) பதவியேற்கிறார். இரண்டு ஆண்டுகள் நிறைவான நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததால் பசவராஜ் பொம்மை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

யார் இந்த பசவராஜ் பொம்மை? என்பது குறித்துப் பார்ப்போம்!

 

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மையின் மகன்தான் பசவராஜ் பொம்மை. இவருக்கு வயது 61. பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர். பொம்மை 1988 - 1989இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். ஜனதா தள கட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை, 2008ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அமைச்சராக இருந்துவரும் நிலையில், முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொள்கிறார். 

 

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, முன்னாள் பிரதமரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான எச்.டி. தேவகவுடாவின் மகன் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்