Skip to main content

மே-23 ஆம் தேதி கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம்?

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. அதில் மொத்தமுள்ள 225 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி 104 சட்டமன்ற தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 77 தொகுதிகளையும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளையும் கைப்பற்றியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113  எம்எல்ஏக்கள்  தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிக எம்எல்ஏக்களை கொண்ட பாஜக கட்சி  முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி , மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கவும், முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை சமாதானப்படுத்தியது.

 

 

 

JDS AND CONGRESS

 

அதன் பிறகு ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற நாள் முதல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மறைமுகமாக முதல்வருக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு அரசு நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார். ஏனெனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள்  அடுத்த முதல்வர் சித்தராமையா  என்று அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து தற்போது தேர்தலை சந்தித்துள்ளது மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் ஜேடிஎஸ் 7 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டனர்.

 

JDS

 

 

இத்துடன் கர்நாடகாவில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல்களும் நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே-23 தேதி நடைப்பெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேரடியாக களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் , மத்தியில் மாநில கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் ஆதரவு தர தயாராக உள்ள நிலையில் , கர்நாடகாவில் முதல்வர் மாறுவாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளன. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் எனில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் , மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள். இதனால் மே-23 ஆம் தேதிக்கு பிறகு தெளிவான அரசியல் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்