Published on 26/12/2021 | Edited on 26/12/2021
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 'ஒமிக்ரான்' பரவியுள்ள நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 'ஒமிக்ரான்' கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய மத்தியக் குழு தமிழ்நாடு வருகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், மிசோரம் மாநிலங்களுக்கும் மத்திய குழு விரைகிறது. அதிகமான 'ஒமிக்ரான்' பாதிப்பு மற்றும் குறைவான தடுப்பூசி விகிதம் உள்ள 10 மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, கரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசிப் பணிகளைத் துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்தியக் குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.