கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமியின் ஆளும் அரசு கவிழும் நிலையில் உள்ளது.
முதலில் ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏ களில், முறைப்படி ராஜினாமா கடிதம் வழங்கப்படவில்லை என 8 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் நிராகரித்தார். மீதமுள்ள 5 பேர் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள ராஜினாமா செய்த எம்.எல்.ஏ க்கள் சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்றே முடிவை கூற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு உச்சநீதிமன்றம் தனக்கு அறிவுறுத்த முடியாது என கூறி இந்த முடிவுக்கு எதிராக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றொரு வழக்கை தொடர்ந்துள்ளார்.