Skip to main content

கர்நாடகா புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு!

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
கர்நாடகா புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு!



கர்நாடக மாநிலத்தில் புரட்சிகர பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் 17 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரிஷ் கர்னாட், பரகுர் ராமச்சந்திரப்பா, பட்டில் புட்டப்பா, சென்னவீரா கனவி உள்ளிட்ட 18 எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, லிங்காயத் மதம் வேண்டும் என்று கோரும் அமைப்பினரின் தலைவரான எஸ்.எம்.ஜம்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளத

எழுத்தாளர் கல்புர்கி கொலை விசாரணையில் அவர் லிங்காயத் மதம் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்ததால் இந்து வெறியர்கள் அவரை குறிவைத்ததாக கூறப்படுகிறது. லிங்காயத் மதம் என்பது சைவ சமயத்தை குறிக்கும். சைவர்களை இந்து மதத்திலிருந்து பிரிக்கும் முயற்சிக்கு ஆதரவாக கௌரி லங்கேஷும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

எனவே, லிங்காயத் அல்லது சைவ சமய ஆதரவாளரான ஜம்தாருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்