Skip to main content

பிரதமர் மோடிக்கு குடை பிடித்த இலங்கை அதிபர்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவிற்கு சென்றார். இந்நிலையில் அங்கிருந்து நேற்று மதியம் இலங்கைக்கு சென்றார். அவருக்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா சிறப்பான வரவேற்பு அளித்தார். மோடிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் முப்படை மரியாதை வழங்கப்பட்டது. அப்போது, அங்கே லேசாக மழை பெய்தது. அப்போது, மைத்திரிபால சிறிசேனா, மோடிக்கு குடைபிடித்தார். இருவரும் ஒரே குடையில் நின்று அணி வகுப்பு மரியாதையை கண்டு ரசித்தனர். பின்பு தாக்குதல் நடைபெற்ற தேவாலயத்திற்கு சென்றார் மோடி. அதன் பிறகு ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயத்தில் நடந்த  குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன்  இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கே  உடனிருந்தார்.

 

india and srilanka

 

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தான் மோடிக்கு குடை பிடிக்கும் ஃபோட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நீங்கள் எங்கள் உண்மையான நண்பனாக நிரூபிக்கிறீர்கள். இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட உங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

 

 

india and srilanka

 

 

மற்றொரு ட்வீட் செய்தியில் இந்திய வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஸ் குமார், ‘வெயிலோ, மழையோ நாங்கள் உங்களுடன் இணைந்திருப்போம்.(Together with you- come rain or shine) பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பின் சில துளிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்