Skip to main content

34,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்... -கர்நாடக முதல்வர் குமாரசாமி

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
kumarasamy

 

 


 

கர்நாடக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே குமாரசாமி தலைமையில் ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்தின் 2018-2019 பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் அமைந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் ஆகும். குமாரசாமி, ரூ.34,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். அதிக மதிப்பிலான பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. முதல் கட்டமாக ரூ.இரண்டு லட்சத்திற்குள் பயிர் கடன் வாங்கியவர்களுக்கே கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2017 டிசம்பர் 31 வரைக்குள் வாங்கப்பட்ட பயிர் கடன்களே முதலில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. வாங்கிய கடனை திருப்பி சரியாக கட்டிக்கொண்டிருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசாங்கம் அந்த பணத்தை விவசாயிகளுக்கே  திருப்பி அளிக்கிறது. அல்லது ரூ.25000 குறைக்கிறது. 

 

 

 

 

விவசாயிகளுக்கு புதிதாக விவசாய கடன் கிடைக்க, ஏற்கனவே வாங்கப்பட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அவர்களுக்கு புது கடன்களை எளிதாகப்பெற அனுமதி சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 6500 கோடி நிதியை ஒதுக்குகிறேன் என்றார் முதல்வர் குமாரசாமி. 

 

 

 

இந்த பட்ஜெட்டில் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இருக்கும் வரியின் மதிப்பையும் உயர்த்தியுள்ளனர். 30 சதவீதமாக இருந்த பெட்ரோல் வரி 32சதவீதமாக உயர்ந்துள்ளது. 19 சதவீதமாக இருந்த டீசல் வரி 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் லிட்டருக்கு 1.14 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.12ரூபாயும் உயர்கிறது. மதுவிற்கான வரியும் 4% உயர்ந்துள்ளது.

 

இந்த பட்ஜெட் பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், விவசாயத்தை லாபகரமாக்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.          

 

 

 

 

சார்ந்த செய்திகள்