வழக்கறிஞர்களிடம் பேடிஎம் மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் உதவியாளரை அலகாபாத் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சாமானியன் முதல் அரசுப் பணியில் இருப்பவர்கள் வரை பல்வேறு முறைகளில் குறுக்கு வழிகளில் லஞ்சம் பெற்று வருகிறார்கள்.
சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்படும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் வரும். இந்நிலையில் அகமதாபாத்தில் நீதிபதியின் உதவியாளர் நூதன முறையில் டிப்ஸ் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்ட மூத்த நீதிபதி ஒருவருக்கு உதவியாளராக இருக்கும் இளைஞர் ஒருவர், அங்கு வரும் வழக்கறிஞர்களிடம் ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜராகும் போதும் டிப்ஸாக பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த முறை அயர்ச்சியை ஏற்படுத்தவே சிரமத்தை குறைக்கும் பொருட்டு பேடிஎம் கியூஆர் கோர்டு லேபிளை இடுப்பில் கட்டிக்கொண்டு அதன் மூலம் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இது நீதிபதியின் கவனத்துக்குச் சென்ற நிலையில் தற்போது அவரின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.