இணைய சேவை தொடர்பான தரச்சான்றுகளை வழங்கும் சர்வதேச அமைப்பான ஊக்லா, நான்காம் காலாண்டில் 4ஜி இணைய சேவையில் எந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பதை அறிவித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு 4ஜி இணைய சேவைக்காக முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிவேக 4ஜி சேவையில் தொடர்ந்து ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.
ஜியோ 4ஜி சேவை எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதால் அதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணைய சேவை 98.8 சதவீதம் எளிதில் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 90 சதவீதம் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் இரண்டாம் இடத்தில் ஏர்டெல் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வோடாஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனத்தின் இணைய சேவைகள் 84.6% மற்றும் 82.8% என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
ஆனால், 4ஜி சேவையின் வேகத்தில் தொடர்ந்து ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இதன் இணைய வேகம் விநாடிக்கு 11.23 மெகா பைட் (எம்.பி.பி.எஸ்) அளவில் உள்ளது. இரண்டாம் இடத்தில் வோடாஃபோன் 9.13 மெகா பைட் (எம்.பி.பி.எஸ்) அளவில் உள்ளது. மூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஜியோ உள்ளது.