Skip to main content

மதங்களை கடந்த மனிதாபிமானம்... ராமர் பெயரை கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் செய்த நெகிழ வைக்கும் உதவி...

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

மலேரியா நோயால் உயிரிழந்த இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் இறுதிச்சடங்கை, இஸ்லாமியர்கள் முன்னின்று நடத்திய சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

islam people helps for last rituals of a hindu girl

 

 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹர்ஹுவா பகுதியை சேர்ந்தவர் சோனி. 19 வயதான இவர் காலரா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை, இருதய நோயால் பாதிக்கப்பட்ட தாய் ஆகிய இருவரையும் சோனி தான் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சோனியின் இறப்பு அவர்கள் குடும்பத்தில் பேரிடியாக விழுந்த நிலையில், இறுதிகாரியங்கள் செய்வதற்கு பணமில்லாமல் அவரது குடும்பம் தடுமாறியுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியில் அருகில் வசிக்கும் இஸ்லாமியர்கள், சோனியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, பின்னர் இறுதி சடங்குகளுக்கான வேலைகளை செய்துள்ளனர். பின்னர் தலையில் குல்லா அணிந்தபடி, தங்கள் தோள்களில் அந்த பெண்ணின் சடலத்தை மயானம் வரை தூக்கி சென்றனர். அதோடு, இந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை செய்ததோடு “ராம் நாம் சத்யாஹை” என்று கூறியவாறே அந்த பெண்ணை தூக்கி சென்றனர். மதவேறுபாடுகளைக் கடந்து நடந்த இந்த பெண்ணின் இறுதிச்சடங்கு பல்வேறு தரப்பிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்