Published on 25/11/2019 | Edited on 25/11/2019
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி, இன்று பிரதமர் மோடி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் ஜார்க்கண்ட்டில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுடபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், " இன்று காலை 11.35 மணிக்குத் தல்டான்காஞ் பகுதியிலும், மதியம் 1:20 மணிக்கு கும்லா பகுதியிலும் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்" என தெரிவித்துள்ளது.