Skip to main content

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கரோனாவுக்கு உயிரிழப்பு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
ுிப

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை  ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. அடுத்து தமிழகத்தில் அதிக அளவு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கர்நாடகம், டெல்லி, தெலுங்கானா, ஆந்திராவிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள கத்ராஸ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்