Published on 22/08/2019 | Edited on 22/08/2019
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்று கைது செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை, அமலாக்கத்துறை சார்பில் விசாரித்து வந்த விசாரணை அதிகாரி ராகேஷ் அகுஜா திடீரென டெல்லி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகேஷ் அகுஜாவின் பதவிக்காலம் அமலாக்கத்துறையில் 3 வாரங்களுக்கு முன்பே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் டெல்லி போலீஸ் பணிக்கு திரும்பி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.