Published on 16/12/2020 | Edited on 16/12/2020
போட்டோக்கள் மற்றும் விடீயோக்களை பகிர்வதற்கான செயலி இன்ஸ்டாகிராம். இந்தச் செயலி, இளம் வயதினரிடையே மிகவும் பிரபலம். மிகப்பெரிய பிரபலங்கள் கூட தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையையும் இந்தச் செயலியில் அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்ஸ்டாகிராமின் மினி வெர்ஷன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த மினி வெர்ஷன் மொத்தமே 2 எம்.பி.தான் உள்ளது. இந்தச் சிறிய வெர்ஷனுக்கு 'இன்ஸ்டகிராம் லைட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் லைட், மெதுவான நெட்வொர்க்கிலும் நன்றாகச் செயல்படும் வண்ணம் வடிவைக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த செயல்திறன் கொண்ட ஃபோன்களிலும் நன்றாகச் செயல்படுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரீல்ஸ் போன்ற சில அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை.