Skip to main content

இளைஞராக சென்று முதியவராக திரும்பிய இந்தியர்;36 ஆண்டுகள் காத்திருந்த மனைவி!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

 

pakisthan

 

 

 

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகிஸ்தான் சிறையிலுள்ள 26 மீனவர்கள் உட்பட 29 பேர் நேற்று நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டு இந்திய பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொண்டுவந்து விடப்பட்டனர். அதில் இளைமைக்காலத்தில் சிறைக்கு சென்று கடந்த 36 ஆண்டுகளாக சிறையிலிருந்து தற்போது 62 வயது முதியவராக வந்துசேர்ந்தவரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

 

pakisthan

 

 

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த வாலிபர் கஜானந்த் சர்மா என்பவர் தனது 36-வது வயதில் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் அவர்கிடைக்கவில்லை ஆனால் இறுதியில் அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்திற்கு தெரிய வந்தது. தங்களது திருமண வயதில் அவரது இளமை காலத்தில் எடுப்பட்ட அவரது புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவரது மனைவி அவர் என்றேனும் ஒருநாள் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தார். தற்போது இளமையில் காணாமல் போன கஜானந்த் சர்மா 62 வயதான முதியவராக தற்போது வீடு திரும்பியிருக்கிறார். அட்டாரி-வாகா எல்லையில் இத்துணை ஆண்டுகள் கழித்து வந்த அவரை நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர் அவரது குடும்பத்தார்கள். 

சார்ந்த செய்திகள்