இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது, தினசரி 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அதன்பிறகு படிப்படியாக நாட்டில் கரோனா பாதிப்பு குறையத்தொடங்கியது. இந்தநிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,346 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது கடந்த 209 நாட்களில் பதிவான குறைந்தபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், 2,52,902 கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீள்பவர்களின் சதவீதம் 97.93 ஆக இருப்பதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் அதிக தினசரி பாதிப்பு பதிவாகிவரும் மாநிலமான கேரளாவில் நேற்று (04.10.2021) 8,850 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. அது நாட்டின் மொத்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.