இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறிப்பயப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 4,033 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 1, 216 பேருக்கும், ராஜஸ்தானில் 528 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 4,033 பேரில் 1552 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.