Published on 23/01/2021 | Edited on 23/01/2021
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 பிறந்தநாள் இன்று (23.01.2021) அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள ட்விட்டில், “நேதாஜியின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் ஒரு நன்றியுள்ள தேசமாக இந்தியா எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
நேதாஜியின்125வது பிறந்தநாளை வருடம் முழுவதும் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதோடு, நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23, இனி ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ (பராக்கிரம ஜெயந்தி) நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் முதல் ‘பராக்கிரம திவாஸ்’ நிகழ்வில் கலந்துகொள்வதோடு, நேதாஜி தொடர்பான அருங்காட்சியகத்தையும் தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.