Published on 24/09/2020 | Edited on 24/09/2020
![INDIA CORONAVIRUS SAMPLES TESTED DETAILS ICMR](http://image.nakkheeran.in/cdn/farfuture/rKEBDX4fCfWE87Y3DsFy8le5-zqVCes5BeA3I18QkNE/1600947064/sites/default/files/inline-images/ICMR%2024.jpg)
நாடு முழுவதும் நேற்று வரை (23/09/2020) மொத்தம் 6,74,36,031 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நேற்று (23/09/2020) ஒரு நாளில் மட்டும் 11,56,569 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று (23/09/2020) வரை மொத்தம் 67,25,037 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (23/09/2020) மட்டும் தமிழகத்தில் 84,979 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.