Skip to main content

3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்!

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
Incident Happened at 3 year old girl in haryana

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 3 வயது சிறுமி. இவர் கடந்த 30ஆம் தேதி மாலை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். 

மாலை நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த அவரின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ரத்த வெள்ளத்தில் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 34 வயது நபர் மீது சந்தேகம் எழ, அவர் திடீரென்ற தலைமறைவானார். இதனையடுத்து, குற்றவாளியை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி, டெல்லி-மும்பை விரைவு சாலையில் உள்ள மரோரா கிராமத்திற்கு அருகே வைத்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், அவர் அந்த சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி அலறி துடித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்