உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் கரோனா தொற்று இருந்து வந்த ஆந்திர மாநிலத்தில், தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அந்த மாநில அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தொற்று நடவடிக்கையை குறைக்கும் நோக்கில் தற்போது பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் அறிவித்துள்ளார். இதன் மூலம் பிளாஸ்மா தானம் தருபவர்களுக்கு 5000 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.