Skip to main content

39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக நான் ஏற்கெனவே சொன்னேன்! - ஹர்ஜித் 

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக நான் ஏற்கெனவே அரசிடம் சொன்னேன் என தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிவந்த ஹர்ஜித் தெரிவித்துள்ளார்.

 

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் அவர்கள் என்னவாகினர் என்ற தகவல்கள் கிடைக்கவேயில்லை. அதைத்தொடர்ந்து ஜர்ஜித் என்பவர், தான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தவன் என்றும், கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஹர்ஜித் மாஸி, ‘39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள் என்ற உண்மையை அரசிடம் சொன்னேன். ஆனால், அரசு அதை ஏற்றுக்கொள்ளாமல், இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை தவறாக வழிநடத்திவிட்டது’ என குற்றம்சாட்டியுள்ளார். 39 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடு துயரகரமானது என பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளர்.

சார்ந்த செய்திகள்