![Husband posts obscene photos of wife on social media](http://image.nakkheeran.in/cdn/farfuture/jskr9QbJn9bjqQD0LLh1UIxfNnOtJobzYY2I1NA0xTk/1732624960/sites/default/files/inline-images/10_174.jpg)
புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி இருந்தது. அத்துடன் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் அவரது உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் சைபர் க்ரைம் போலீஸ் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தது அவரது இரண்டாவது கணவர் பாண்டியன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாண்டியனை கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த இளம்பெண் பாண்டியனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அந்த பெண் பாண்டியனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மிரட்டி அவரது ஆபாசப் படங்களை பாண்டியன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்பு சிறையில் அடைத்தனர்.