ஆந்திராவிற்கு ஹாய் சொல்லும் ஹைப்பர்லூப் - இனி ஒருமணிநேர பயணம் ஐந்து நிமிடத்தில்!
நாளுக்கு நாள் பயணத்தின் வேக மதிப்பீடுகள் மாறிக்கொண்டே வருகின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் வேகமான பயணங்களுக்காக டைம் மெஷின்களைப் போல எதையேனும் கண்டுபிடித்தாலும் வியப்பதற்கில்லை. தற்போதைய நிலையில் உலகின் அதிவேக பயணத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் ஹைப்பர்லூப் மட்டுமே. இந்த ஹைப்பர்லூப்பின் மூலம் மணிக்கு சுமார் 1,500கிமீ வரை பயணிக்க முடியும்.
இந்த ஹைப்பர்லூப் ஆந்திரா மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து அமராவதி வரையில் இதற்கான வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலோன் மஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் 2012ல் உருவாக்கப்பட்டது தான் ஹைப்பர்லூப். இதன் வழியாக பயணிகள் மற்றும் சரக்குகளை தூக்கிச் செல்ல முடியும். நீண்ட குழாய் போன்ற உருளைதான் இதற்கான ஓடுதளம்.
ஏற்கனவே, இதனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியாவில் ஹைப்பர்லூப் வரப்போகிறது என செய்திகள் பரவி வருகின்றன.
- ச.ப.மதிவாணன்