
உடற்பயிற்சி இயந்திரம் தானாகவே இயங்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷய சக்திகள் குறித்து நாம் கதைகளில் கேட்டிருப்போம். அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஜான்சி பகுதியில் திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்த உடற்பயிற்சி இயந்திரம் தானாகவே இயங்கி கொண்டிருந்த சம்பவம்தான் தற்போது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Fitness freak ghost ??@jhansipolice got a tip off about an open gym being used by ghosts!Team laid seige & soon found t real ghosts-Some mischievous person made video of moving swing & shared on #socialmedia. Miscreants will b hosted in a ‘haunted’ lockup soon #NoHostForGhost pic.twitter.com/JUaYt4IJMS
— RAHUL SRIVASTAV (@upcoprahul) June 12, 2020
மனிதர்கள் அமர்ந்து உடற்பயிற்சி செய்தால் அந்த இயந்திரம் எப்படி செயல்படுமோ அப்படி அதே போன்று முழு பலத்துடன் அந்த இயந்திரம் தானாகவே இயங்கி உள்ளது. இதனை அருகில் உடற்பயிற்சி செய்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரல் ஆனது. இந்த வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு செல்ல, அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதிகப்படியான கிரீஸ், இயந்திரத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்படுவதால் இயந்திரம் தானாகவே இயங்குவதை அவர்கள் கண்டுபடித்தார்கள். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.