உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (14-09-2020) தொடங்கி நடைபெற்று வருகின்றது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் தந்துள்ளது என்றும், கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க எம்.பி.க்களின் ஊதியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.