கரோனாவால் ஒட்டுமொத்தமாக திருப்பி போடப்பட்ட 2020 ஆம் ஆண்டு, ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது. இந்தாண்டு முடிய இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம், இந்தியாவில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்ட நிகழ்வுகள், தேடப்பட்ட பிரபலங்கள் என சில பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகமாக தேடப்பட்டவை பட்டியலில், ஐபிஎல் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் இந்த கிரிக்கெட் திருவிழா, காரோனா வைரஸையே இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள், பிரதமரின் கிஷான் யோஜனா திட்டம், பீகார் தேர்தல் முடிவுகள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அர்னாப் கோஸ்வாமியும், அதற்கடுத்தடுத்த இடங்களை, கனிகா கபூர், வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் பிடித்துள்ளனர்.
மேலும், பன்னீர் எப்படி தயாரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகப்படுத்துவது, டல்கோனா காபி எப்படி தயாரிப்பது, ஆதரோடு பான் கார்டை இணைப்பது எப்படி, வீட்டில் சானிட்டைஸர் தயாரிப்பது எப்படி உள்ளிட்டவை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளாக உள்ளன.