உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அம்மாநிலத்தில் சோன்பத்ரா பகுதியில் 3350 டன் எடை கொண்ட தங்க சுரங்கங்கள் இருப்பதை அம்மாநில தொல் பொருள்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர் எனவும் மேலும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் 2700 டன் தங்கமும், ஹார்டீ என்ற இடத்தில் 650 டன் அளவுக்கு தங்கமும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் பரவியது.
மேலும் சுரங்கத்தில் உள்ள தங்கம் முழுவதையும் வெட்டி எடுத்தால் இந்திய நாட்டின் தங்கத்தின் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்ஐ எனும் மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அந்த இடத்தில் உள்ள தனிமங்களை வைத்து 160 கிலோ தங்கம் மட்டுமே எடுக்க முடியும் என கூறியுள்ளது. டன் கணக்கில் தங்கம் உள்ளது என்பதெல்லாம் பொய் என விளக்கியுள்ளது.