இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக கிழக்கு எம்.பி யுமான கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த கம்பீர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்து கடந்த மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருவதாக அவர் புகார் கொடுத்துள்ளார். ஷாஹ்தாரா மாவட்ட காவல்துறை அதிகாரியிடம், இதுதொடர்பாக கம்பீர் கொடுத்துள்ள புகாரில், "எனக்கும் எனது குடும்பத்திற்கும் சர்வதேச எண்ணிலிருந்து கொலை மிரட்டல்கள் வருக்கின்றன. எனவே இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.