Published on 18/02/2019 | Edited on 18/02/2019
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் வழக்கில் இன்று வழங்கிய இந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என கூறி பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.