’’ஈக்கள், கொசுக்களை அழிப்பதற்கு
நாங்கள் கடவுள் அல்ல’’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இந்தியா முழுவதும் கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும், அவற்றை ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தனேஷ் லெஷ்தான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவின் போது, ’’ஒவ்வொரு வீடாக சென்று ஈக்கள் இருக்கிறதா, கொசுக்கள் இருக்கிறதா என்று கண்காணித்து எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாட்டில் உள்ள ஈக்கள், கொசுக்கள் இவற்றை எல்லாம் அழிக்க வேண்டும் என்றால் அது கடவுளால் மட்டும்தான் முடியும். அவற்றை அழிப்பதற்கு நாங்கள் என்ன கடவுளா? நாங்கள் ஒன்றும் கடவுள் அல்ல. எனவே இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்’’ என்று கூறியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.