Skip to main content

10 கிலோ அரிசி தராததால் தாயைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற மகன்!

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
Incident happened to mother with axe for not giving him 10 kg of rice by son in odisha

ஒடிசா மாநிலம், சரத்சந்திரபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராய்பரி சிங். இவருக்கு, ரோஹிதாஸ் மற்றும் லஷ்மிகாந்த் சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ரோஹிதாஸுக்கும், லஷ்மிகாந்திற்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. 

இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று, ரோஹிதாஸ் தனது தாய் ராய்பரி சிங்கிடம் 10 கிலோ அரிசி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரோஹிதாஸ், கோடாரியை எடுத்து தனது தாயை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராய்பரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதன் பின்னர், அதே கோடாரியை வைத்து தனது கழுத்தை அறுத்து ரோஹிதாஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், லஷ்மிகாந்த் வீட்டிற்கு வந்த போது, அங்கு தாய் இறந்த நிலையிலும், சகோதரர் காயங்களோடும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த ரோஹிதாஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு லஷ்மிகாந்த் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஹிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்