அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்தீக் பாண்டியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமேதை அம்பேத்கர் குறித்து வெறுப்பைப் பரப்பும் விதமாக கருத்து பதிவிட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் மேக்வால் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹர்தீக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த அம்பேத்கர்??? ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா? அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா? என’ பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மேக்வால் தான் தொடர்ந்துள்ள வழக்கில், ‘ஹர்தீக் பாண்டியா அரசியலமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமின்றி, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைத் தாக்கியுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்தீக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.