Published on 21/01/2021 | Edited on 21/01/2021

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும் கரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் முதலாம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள SEZ3 என்ற கட்டடத்தின் 4வது மற்றும் 5வது தளங்களில் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் முயன்று வருகின்றன.