
மகாராஷ்ட்ராவில் தலைமைச் செயலகத்தில் புகுந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநில தலைமைச்செயலகம் முன்பு விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தும் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்து முதல் மாடிக்கு சென்ற விவசாயிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த வலைகளில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் பாதுகாப்பு வலையில் இருந்து மீட்டு கைது செய்து தலைமைச் செயலகத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மகாராஷ்ட்ராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.