அயோத்தி ஆனார் கோயிலுக்கு அடியில் டைம் கேப்சூல் வைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை எனக் கோயில் கட்டுமான அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ள சூழலில், கோயிலுக்குக் கீழே 2,000 அடி ஆழத்தில் கோயில் மற்றும் ராமரின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் வகையிலான டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இது உண்மை இல்லை எனக் கோயில் கட்டுமான அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "ராமர் கோயில் கட்டுமான இடத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டைம் கேப்சூல் வைக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதனை யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.